Tuesday, July 29, 2014

குமரிக்கண்டம் - லெமூரியா (Kumari Continent - Lemuria)



வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின்குடக்கும் (புற. 6)

செந்நீர் பசும்பொன் உயரியர்க் கீந்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர் பஃறுளி மணலினும் பலவே (புற. 9)

அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலம்பு. 11-17-22)

மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்று மேற்சென்று மேவார் நாடு இடம்படப்
புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன் (கலி: 104-1-4)

உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு..!

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன. கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். 

தமிழின் முதல் தமிழ்ச் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன், சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன.

இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.. இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.

மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.


 புலவர் குழந்தை அவர்களின் குமரிக்கண்டம் வரைப்படம்


என். மகாலிங்கம் அவர்களின் 30000 வருடத்திற்கு முற்பட்ட சங்கம் வளர்த்த குமரிக்கண்டம் வரைப்படம்

எர்னெஸ்ட் ஹெக்கல் (Ernst Haeckel)

திடீரன நிகழ்ந்த கடற்கோளால் பக்றுளியாறும் பன்மலையடுக்கும், குமரியாறும், உரிக்கோடும், தென் மதுரையும் முதல் தமிழ்ச்சங்கமும் முழுமையாய் அழிந்து கடலுக்குணவாயின. தரைப்பகுதிகளாக இருந்த பாண்டிய நாடு அழிந்து இந்து மகா சமுத்திரமாக மாறியது. தலைச் சங்கமும் தலைச்சங்க நூல்களும் அழிந்தன. பாண்டி நாட்டுடன் பழமை வாய்ந்த லெமூரியாக் கண்டமும் அழிவுற்றது எனப் பேராசிரியர் ஹெக்கல் கூறுகிறார்.


Ernst Haeckel Map Lemuria Human Origins

Haeckel claimed the origin of humanity was to be found in Asia: he believed that Hindustan (South Asia) was the actual location where the first humans had evolved. Haeckel argued that humans were closely related to the primates of Southeast Asia and rejected Darwin's hypothesis of Africa.

Haeckel later claimed that the missing link was to be found on the lost continent of Lemuria located in the Indian Ocean, he believed that Lemuria was the home of the first humans and that Asia was the home of many of the earliest primates, he thus supported that Asia was the cradle of hominid evolution. Haeckel also claimed that Lemuria connected Asia and Africa which allowed the migration of humans to the rest of the world.


குமரிக்கண்டத்திலிருந்து பழைய கற்காலத் தமிழர்கள் பரவிச் சென்ற காட்டும் மாதிரி வரைப்படம்


குமரிக்கண்டம்

இலெமூரியா கண்டத்தின் மருமம் - மூன்றுமாக் கடல்களின் புதிர் - 1974 (The Mystery of Lemuria - The Riddles of Three Oceans - 1974) - அலெக்சாந்தர் கொந்தரத்தோவ் (A . Kondratove)


தமிழர்கள் திராவிட இனத்தின் முன்னோடிகள். அவர்கள் மறைந்துபோன இலெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதியான நாவலந்தீவில் தோன்றி, தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும் பரவிய தொன்முதுக் குடிமக்கள் என்றும், இவர்கள் அயல் நாடுகளினின்று தமிழ்நாட்டிற்கு வரவில்லை என்றும், தமிழ்நாட்டில் தோன்றி எல், உபைதியா, எல்லாம், சுமேரியா நாடுகளில் குடியேறி, அங்குப் பயிர்த் தொழிலை வளர்த்துப் பல்வேறு கைத் தொழில்களைப் பெருக்கிச் சமயத்தையும் பண்பாட்டையும் நாகரீகத்தையும் வளர்த்தவர்கள்.

தமிழ்மொழி, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தொன்மையான மொழி, தமிழர்கள் தென்னிந்தியாவில் தோன்றிய தொல்பழங்குடி மக்களாவர்.


Expedition to Poompuhar - Remains of Kumari Kandam - Graham Hancock Underworld E02 (2002)

https://www.youtube.com/watch?v=o7GWn5Hba9g

The place is called Poompuhar. It lies on southeast India's Coromandel coast facing the Bay of Bengal between modern Tamil Nadu and Sri Lanka. Its immediate offshore area has been the subject of marine archaeological investigations by India's National Institute of Oceanography since the 1980's -- and numerous non-controversial finds of man-made structures dated between the third century AD and the third century BC have been made in the "inter-tidal zone" close to shore at depths down to 6 feet (approximately 2 metres).

These finds of structures in shallow water (some so shallow that they are exposed at low tide) have been quite widely written-up in the archaeological literature. But for some reason other discoveries that the NIO has made in deeper water off Poompuhar have attracted no attention at all. Most notably these other discoveries include a second completely separate group of structures fully three miles from the Poompuhar shore in water that is more than 70 feet (23 metres) deep. The lack of interest is surprising because to anyone with even minimal knowledge of post-glacial sea-level rise their depth of submergence is - or should be - highly anomalous. Indeed according to Glenn Milne's sea-level data the land on which these structures were built last stood above water at the end of the Ice Age more than 11,000 years ago.

Is it a coincidence that there are ancient Tamil flood myths that speak of a great kingdom that once existed in this area called Kumari Kandam that was swallowed up by the sea? Amazingly the myths put a date of 11,600 years ago on these events -- the same timeframe given by Plato for the end of Atlantis in another ocean.

Like the cities in the Gulf of Cambay the underwater structures three miles offshore of Poompuhar were first identified by an instrument called sidescan sonar that profiles the seabed. One structure in particular was singled out for investigation and was explored by divers from India's National Institute of Oceanography in 1991 and 1993. Although they were not at that time aware of the implications of its depth of submergence -- i.e. that it is at least 11,500 years old -- the 1991 study confirms that it is man-made and describes it as: a horse-shoe-shaped object, its height being one to two metres. A few stone blocks were found in the one-metre wide arm. The distance between the two arms in 20 metres. Whether the object is a shrine or some other man-made structure now at 23 metres [70 feet] depth remains to be examined in the next field season.

The 1993 study refines the measurements: The structure of U-shape was located at a water depth of 23 metres which is about 5 kilometres off shore. The total peripheral length of the object is 85 metres while the distance between the two arms is 13 metres and the maximum height is 2 metres Divers observed growth of thick marine organism on the structure, but in some sections a few courses of masonry were noted

After 1993, no further marine archaeology was conducted along the Poompuhar coast until 2001 when I arranged with the NIO to dive on the U-shaped structure with funding from Channel 4 television in Britain and the Learning Channel in the US. Exclusive footage of the structure was filmed and is shown in episode 2 of the Underworld television series. Chapter 14 of the book is a report of our dives at Poompuhar, and what we found there.

Dr A.S. Gaur of the NIO told me on camera that it would have required "a very great technology" to build the U-shaped structure -- one far beyond the abilities of known cultures in India 11,500 years ago. For Dr Gaur this is a reason to doubt the accuracy of the sea-level-data which suggests that the structure was submerged so long ago. However the NIO have not yet been successful in recovering any datable materials or artefacts that could tell us its age more directly (for example by C-14 or TL tests).

Graham Hancock
February 2002



Thursday, April 24, 2014

Model Suggests Waves of Migration Out of Lemuria (Kumari Kandam)


Model Suggests Waves of Migration Out of Lemuria (Kumari Kandam)




The lost continent of "Kumari Kandam" sunk into the Indian Ocean 1000s of years ago, vanishing a humongous Tamil civilization.

https://www.youtube.com/watch?v=PZKiCpFisoY